வேங்கை வயல் விவகாரத்தில் ட்விஸ்ட்! 8 பேர் மறுப்பு ; 3 பேரிடம் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனை...!

வேங்கை வயல் விவகாரத்தில் ட்விஸ்ட்! 8 பேர் மறுப்பு ; 3 பேரிடம் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனை...!

வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு ஒப்புக் கொள்ளாததால் மீதமுள்ள 3 பேரிடம் மட்டும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், காவலர் முரளி ராஜா உட்பட 9 பேர், இறையூர் மற்றும் கீழ முத்துக்காடு பகுதியில் தலா ஒருவர் என மொத்தம் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையும் படிக்க : வங்காள பறவையை நீர் தூவி வரவேற்ற சென்னை விமான நிலையம்...!

அதன்படி, 11 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் மருத்துவமனையில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், காவலர் முரளி ராஜா, இறையூர் மற்றும் கீழ முத்துக்காட்டை சேர்ந்த 2 பேர் மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர். 

அதேநேரத்தில், வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இன்று ஆஜராகிய மூன்று நபர்களுக்கு மட்டும் டிஎன்ஏ இரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.