அரசின் வேலைகளை கண்காணிக்கும் சி.எம். டாஷ்போர்டு... இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் மின்னணு தகவல் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அரசின் வேலைகளை கண்காணிக்கும் சி.எம். டாஷ்போர்டு... இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழக அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய முயற்சியில் “CM Dashboard” என்ற புதிய திட்டம் இன்று  தொடங்கப்படுகிறது. அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்த மின்னணு தகவல் பலகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு 360 என்ற தமிழக அரசின் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையிலும், திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கை குறித்த கண்காணிப்பு மற்றும் அடுத்த தலைமுறை ஆட்சி நிர்வாகத்தை எடுத்து செல்லும் வகையிலும் முதலமைச்சர் தகவல்பலகை உருவாக்கப் பட்டுள்ளது. இதனை இன்று முதல், முதலமைச்சர் பயன்படுத்தத் தொடங்குகிறார்.

மேலும், இன்று மாலை 6 மணிக்கு கொளத்தூரில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டான் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். அப்போது, தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர்  வழங்க உள்ளதார்.