போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற பணியாளர்கள்

போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற பணியாளர்கள்

கோவையில் 3 நாட்களாக நடைபெற்று வந்த மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றம் பேரூராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சமீரனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் 3-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது.

சுமூக உடன்பாடு

இந்த நிலையில்  மேயர் கல்பனா மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

18 கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை

இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் மத்தியில் பேசிய நிர்வாகிகள், அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் படி கேட்டுக் கொண்டனர். செய்தியாளர்களிடம்  பேசிய கோவை மாவட்ட தூய்மை பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம்,  குறைந்தபட்ச கூலி உள்பட, 18 கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மேயர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.