" அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை "- வைகோ கண்டனம்.

" அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை  காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை "-   வைகோ கண்டனம்.

தலைமைச் செயலகத்தில்  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தியிருப்பது  காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  மதிமுக  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மதிமுக பொது செயலாளர் வைகோ  தலைமையில் இன்று காலை துவங்கி  நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 65 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர் மேலும் மதிமுக வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும்  வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்  திமுகவுடன் கூட்டணியில் இருந்து தொடர்ந்து பயணிப்பது குறித்தும், தற்போது செந்தில் பாலாஜி கைது விவகாரம் குறித்தும்  பேசப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து,  மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ   செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார் .மதிமுக வின் ஐந்தாவது பொது  தேர்தல் நடைபெற்று இருபத்தி ஒன்பதாவது பொதுக்குழு  இன்று நடைபெற்று வருவதாகவும், இதில்  கடந்த ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று  அதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள்    மொத்தம் 1556 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு அழைப்பாளராக 120 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தும்  அதில் 83பேர் பங்கேற்று உள்ளனர்.மொத்தமாக 1552 உறுப்பினர்கள் இந்த  மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடைபெற்றதன் காரணமாக அதில் இருந்து அவர்  உடல் நலம்  பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தற்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு  அறுவை சிகிச்சை செய்யக்கூடிய அளவில்  இருப்பதாகவும் அந்த அறுவை சிகிச்சை எங்கே செய்வது என்று தற்போது கேள்வியாக உள்ளதாகவும் ராட்சசத்தனமான மூர்க்ககுணத்தோடு மத்திய அரசு இவ்வாறு நடந்து கொள்வதாகவும் இதுபோன்ற சோதனைகள் மற்றும் கைது மூலம் எதிர்க்கட்சிகளை  ஒடுக்கி விடலாம் என  மத்திய பாஜக அரசு எண்ணுவதாவும்  இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும்  அவர் குறிப்பிட்டார் 

 மேலும், பேசிய அவர்  தலைமைச் செயலகத்திற்கு சென்று சோதனை நடத்த வேண்டிய வேலையே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு இல்லை என்றும், மாநில அரசை மிரட்டுவதற்காகவும்   அச்சுறுத்துவதற்காகவும் தான் இந்த நடவடிக்கை எட்ன்றும் கூறினார்.   செந்தில் பாலாஜி உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம் அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்தால்  மத்திய அரசுதான் பொறுப்பாகும் என்றும் கூறினார்.  செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டங்களுக்கு தோழமைக் கட்சியாக மதிமுக பங்கேற்கும்  எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்திருப்பது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை   என  அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க     | " அமலாக்கத்துறை நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறது " - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.