கர்நாடகா -ல தண்ணி விட்டாலும், இந்த காண்ட்ராக்டர் தண்ணி விடமாட்டாரு போலருக்கே...!

யாரு சாமி இவரு...? ரூம் போட்டு யோசிப்பாரோ...?

கர்நாடகா -ல தண்ணி விட்டாலும்,   இந்த  காண்ட்ராக்டர்  தண்ணி விடமாட்டாரு  போலருக்கே...!

வேலூர் மாவட்டத்தில் வீட்டில் வெளியில் நிறுத்தியிருந்த இருசக்கரவாகனத்தோடு சேர்த்து சாலைஅமைத்தது குடிநீர் அடிபம்புடன் சேர்த்து சிமெண்ட் சாலை கால்வாய் அமைக்கப்பட்டது என ஏற்கனவே தொடர்ந்து பெரும் சர்ச்சைகளைக்  கடந்த ஆண்டு ஏற்படுத்திய நிலையில்,

இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதவச்சேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக  5 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. 

ஆனால் குடிநீர் அடிபம்பு பயன்பாட்டில் இருந்ததை புதைத்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் கொந்தளித்து உள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்  அடிபம்போடு  போடபட்ட தார்சாலையை வீடியோ எடுத்து அந்த ஊர்மக்கள் அதனை சமூகவலைதளங்களில் பரவி வருகின்றனர். 

மேலும்,  ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீரை அவர்களுக்கு கிடைக்காதவாறு அலட்சியத்துடன் செயல்பட்டு  எதற்கும் உதவாத வகையில் இப்படி ஒரு காரியத்தை செய்த காண்ட்ராக்டர் மீதும் இதனை சரியாக மேற்பார்வை இடாமல் இருந்த ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கை கண்டித்தும் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதையும் படிக்க    } 'மன் கி பாத்' நிகழ்ச்சிக்கு போகாதது ஒரு குத்தமா...?