குடிபோதையில் ஓட்டுநர் ரகளை.... சட்டையை கழற்றி விட்டு பணிமனையின் முன்பு படுத்துக்கொண்டதால் பரபரப்பு....!!

நாகை அருகே அரசு பணிமனை முன்பு குடிபோதையில் சட்டையை கழற்றி விட்டு படுத்து தர்ணாவில் ஈடுபட்ட ஓட்டுநரால் பரபரபபு ஏற்பட்டது.

குடிபோதையில் ஓட்டுநர் ரகளை.... சட்டையை கழற்றி விட்டு பணிமனையின் முன்பு படுத்துக்கொண்டதால் பரபரப்பு....!!

நாகப்பட்டினம் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் தனபால். இவர் இன்று நாகப்பட்டினத்திற்கு செல்ல  காரைக்கால் அரசு பேருந்து கழகத்திற்கு சொந்தமான  பேருந்தில் பயணம் செய்து வந்தார்.

அப்போது நடத்துனரிடம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இறக்கி விடுமாறு கேட்டுள்ளார். அந்த இடத்தில் நிறுத்தம் இல்லாத நிலையில் புதுச்சேரி மாநில போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுனர் இறக்கிவிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தான் பயணம் செய்தது வேறு மாநில பேருந்து என்பது கூட தெரியாமல், முழு போதையில் நேராக தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனை சென்று, பனிமனை முன்பு ரகளையில் ஈடுபட்டார். நானும் ஓட்டுனர் என்னை இறக்கி விட மாட்டேன் என்று சொன்ன  நபர் வரும்வரை நான் இங்கிருந்து அசைய மாட்டேன் என்று கூறிய நடுரோட்டில் சட்டையை கழற்றி விட்டு தர்ணா போராட்டத்தில் படுத்து விட்டார்.

அவரை சக ஊழியர்கள் சமாதானம் செய்ய முயற்ச்சித்தனர். இருப்பினும் அந்த முயற்சி தோல்வில் முடிந்தது. உடனே இது குறித்து வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.