கரூரில் பரபரப்பு..! செல்போன் டவரில் ஏறி பெண் போராட்டம்..!

கரூரில் பரபரப்பு..!   செல்போன் டவரில் ஏறி பெண் போராட்டம்..!

கரூர் தாந்தோணிமலை, குமரன் சாலையில் 150 அடி உயர செல்போன் டவரில் ஏறி 2 மணி நேரத்திற்கு மேலாக கீழே இறங்கி வர மறுத்து செல்வி என்ற பெண்மணி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் தான்தோன்றிமலையில் 150 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கரூர் தாந்தோணி மலை, குமரன் நகரை சேர்ந்தவர் செல்வி. இவரது கணவர் பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். முட்டை வியாபாரம் செய்து வரும் செல்வி, கரூரில்  அருள் தாந்தோணி மலை, கடைவீதி பகுதியில் சிறிய கடை வைத்துள்ளார்.  அவ்வப்போது சிறிய  வேன் மூலம் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று முட்டை வியாபாரம் செய்து  வந்தார். 

இன்னிலையில் சில நாட்களுக்கு முன்பு வேடசந்தூர் பகுதியில் முட்டை வியாபாரம் செய்ய சென்றபோது, அங்குள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கும், செல்விக்கும் பிரச்சனை ஏற்பட்டு வாய்தகறாரு முற்றி செல்வி தாக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து தன்னை தாக்கிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், செல்வியை அலைக்கழித்துள்ளனர். 

இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வி இன்று திடீரென வீட்டு அருகே இருந்த 150 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி என்னை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் குதித்து விடுவேன் என தற்கொலை மிரட்டல் விடுத்தார். 

இதையும் படிக்க     }  ஆளுநரை மிரட்டும் வகையில் பேசிய நிர்வாகி மீண்டும் திமுகவில் சேர்ப்பு..!

இதனையடுத்து,  சம்பவ பகுதியில் போலீசார் தீயணைப்புத் துறை வீரர்கள் குவிந்தனர். செல்வியை டவரிலிருந்து கீழே இறக்க பல நடவடிக்கை முயற்சிகள்  எடுத்தனர். ஆனால் செல்வி தன்னை மீட்க யாராவது மேலே ஏறினால் குதித்து விடுவேன் என கூறியதால் அவரை மீட்கும் பணி தாமதமாகி கொண்டு சென்றது. அங்கு வந்த கரூர் ஏடிஎஸ்பி கீதாஞ்சலி மற்றும் கோட்டாட்சியர் ரூபினா மற்றும் போலீஸ் அதிகாரிகள் செல்வியிடம் எவ்வளவோ பேசி சமாதானப்படுத்த முயன்றனர். 

பின்னர், சில மணி நேரங்களுக்கு பிறகு செல்வியை சமாதானப்படுத்தி தீயணைப்பு துறையினர் மெதுவாக கீழே இறக்கி கொண்டு வந்தனர். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்று உள்ளனர். இந்த சம்பவத்தால் தாந்தோணிமலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க     }  " கருத்தியல் முரண்கள் இருந்தாலும்,... பாஜகவுக்கு எதிரான இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்..!" - திருமாவளவன்.