2013 ஆம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு?

2013 ஆம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு?

2013ம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2013-ம் ஆண்டுக்கு முன்னர் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தமிழக அரசு நிபந்தனை விதித்தது.  ஆனால் இத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் 2013ம் ஆண்டுக்கு முன் டிஆர்பி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்கவும், ஆசிரியர்களுக்கு TET தேர்வுக்கு இணையான புத்தாக்க பயிற்சி வழங்கவும் முடிவு செய்து அரசாணை வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அரசுப்பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.