" நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்தது மனிதநேயமற்ற செயல்" - மு.க.ஸ்டாலின்.

" நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்தது மனிதநேயமற்ற செயல்" - மு.க.ஸ்டாலின்.


விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்தது மனிதநேயமற்ற செயல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 


செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகளை பயன்படுத்தி, தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கி வருவதாக குற்றம்சாட்டினார். இதுமட்டுமே அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனுமதியின்றி,அத்துமீறி தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து, விசாரணை நடத்தியதற்கு, அகில இந்திய கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதோடு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என கூறிய பிறகும், நெஞ்சுவலி வரும் அளவிற்கு சித்ரவதை செய்தது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமலாக்கத்துறை மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், வழக்கை செந்தில் பாலாஜி சட்டப்படி சந்திப்பார் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்தித்த புகைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இதையும் படிக்க     | செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் இரட்டை வேடம் போடுகிறார் " - எடப்பாடி பழனிச்சாமி.