லியோவை பார்க்க சுவர் ஏறி குதித்த ரசிகர்... காத்திருந்த அன்பு பரிசு!

கிருஷ்ணகிரியில் நடிகர் விஜயின்  லியோ திரைப்படத்தை பார்க்க namthடிக்கெட் கிடைக்காததால் திரையிரங்கின் பின் பக்க சுவற்றில் ஏறி குதித்த விஜய் ரசிகரின் கால் முறிவு.

கிருஷ்ணகிரி பச்சிகானப்பள்ளி பகுதியை அன்பரசு என்ற விஜய் ரசிகர் லியோ படத்திற்கு முதல் காட்சிக்கு டிக்கெட் எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் படத்திற்கான டிக்கெட் கிடைக்காததால் காலை முதலே திரையரங்கு உள்ளே அனுமதிமதிக்குமாறு வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

அணைத்து விதமான ராஜதந்திரங்களும் வீணாகிய நிலையில், உள்ளே அனுமதிக்காததால் திரையரங்கின் பின்பக்க சுவற்றில் ஏறி குதித்து உள்ளே செல்ல முயன்றுள்ளார். அப்பொழுது, தவறி விழுந்து இளைஞரின் கால் முறிந்துள்ளது. கால் முறிந்தால், வேதனையில் படுத்திருந்த இளைஞரை மீட்ட காவல்துறையினர் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

அதன் பின்னர், காவலர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த மற்ற விஜய் ரசிகர்கள் சேர்ந்து அவரை தூக்கி ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.