தக்காளி திருட்டை தடுக்க காவல் காக்கும் விவசாயிகள்.!

தக்காளி திருட்டை தடுக்க காவல் காக்கும் விவசாயிகள்.!

தக்காளி விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி திருடுபோவதை தடுக்க இரவும் பகலும் விவசாயிகள் காவலுக்கு நிற்கும் விநோதம் அரங்கேறி உள்ளது.  

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டுப்புலியூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் மேல் அப்பகுதி விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அறுவடை முடிந்துவிட்ட நிலையில், ஒரு சில விவசாயிகளின் தோட்டங்களில் மட்டும் தக்காளி அறுவடை முடியும் தருவாயில் தக்காளி பறித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த  நிலையில் இரவு நேரங்களில் தக்காளியை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக குற்ற சாட்டு எழுந்துள்ள நிலையில் விவசாயிகள் இரவு பகலாக தோட்டத்தில் காவலுக்கு இருந்து வருகின்றனர். ஆனாலும் விவசாயிகள் ஏமாறும் நேரம் பார்த்து தோட்டத்தில் உள்ள தக்காளிளை திருடி சென்றுவிடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, மேட்டுப்புலியூர் கிராமத்தில் தக்காளி விவசாயம் செய்து வரும் கூறுகையில் எங்களது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளோம். அறுவடை முடிவடையும் நிலையில் தற்போது ஒரு கிலோ தக்காளி எங்களிடம் இருந்து 60 க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து பொதுமக்களிடம்  100க்கு விற்பனை செய்கின்றனர். தக்காளியை பாதுகாக்க இரவு பகலாக தோட்டத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறோம். பகலில் வீட்டு பெண்களும், இரவில் ஆண்களும் பாதுகாப்பில் உள்ளோம்.

தோட்டத்திலேயே கட்டில்போட்டு படுத்துறங்குகிறோம். அதிகாலை நேரம் குளிர் காரணமாக வீட்டிற்கு செல்லும்போது, தோட்டத்திற்குள் புகும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், தக்காளிகளை பறித்து சென்றுவிடுகின்றனர். தற்போது 4 பெட்டிகள் வரவேண்டிய நிலையில், இரண்டு பெட்டிகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் நஷ்டம் ஏற்படுவதுடன், மிகுந்த மன உளைச்சலும் ஏற்படுகிறது என வேதனையுடன் தெரிவித்தார்.

இதையும் படிக்க    | "போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை" அமைச்சர் சிவசங்கர் உறுதி!