ஆயிரக்கணக்கான மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்: நடப்பது என்ன?  

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், ஆயிரக்கணக்கான மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

அம்மாபேட்டை, அருந்தவபுரம், உத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், குவியல் குவியலாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. 10  நாட்களுக்கும் மேலாக மலை போல் குவிந்து கிடக்கும் நெல்மணிகள் மழையில் நனைந்து வருவதாகவும், அதனை நாள்தோறும் வெயிலில் காய வைத்து வருவதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக கொள்முதல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், நெல் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.