தமிழ்நாட்டில் முதன் முறையாக இ - பட்ஜெட் தாக்கல்: பட்ஜெட் விவரங்களை உறுப்பினர்கள் எப்படி பார்பார்கள் தெரியுமா?

தமிழக முதலமைச்சரக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

தமிழ்நாட்டில் முதன் முறையாக இ - பட்ஜெட் தாக்கல்: பட்ஜெட் விவரங்களை உறுப்பினர்கள் எப்படி பார்பார்கள் தெரியுமா?

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்  முதன் முறையாக இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதன் முதலாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதேபோல, தமிழக சட்டசபையில் முதன் முறையாக இன்று காகிதமில்லா இ - பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் வாசிக்கும் பட்ஜெட் உரை, கணினி திரையில் ஒளிரும். இது தவிர அனைத்து உறுப்பினர்களும் கையடக்க தொடுதிரை கணினி வழங்கப்பட உள்ளது. இதிலும், பட்ஜெட் உரை இடம் பெற்றிருக்கும். புத்தகத்தை புரட்டுவது போல, பக்கங்களை முன்னும் பின்னும், மேலும் கீழும் சட்டமன்ற உறுப்பினர்கள் நகர்த்தி உரையை பார்க்கலாம்.தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, சட்டசபை அரங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.