மணப்பாட்டில் தூண்டில் வளைவுப் பாலம் அமைக்க வேண்டும்.. விரைவில் பணியை தொடங்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்!!

திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு மீனவ கிராமத்தில்  தூண்டில் வளைவுப் பாலம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணப்பாட்டில் தூண்டில் வளைவுப் பாலம் அமைக்க வேண்டும்.. விரைவில் பணியை தொடங்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு மீனவ கிராமத்தில்  சுமார் 5000 குடும்பங்கள் வசிக்கின்றன. 300-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணப்பாடு பகுதியில் இயற்கை காலநிலை மாறுபாடு காரணமாக மணல் திட்டுகள் உருவாகி உள்ளது. கரையில் இருந்து கடல் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மணல் திட்டுகள் உள்ளதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே  தங்கள் பகுதிக்கு தூண்டில் வளைவு பாலம் அமைத்து தரக் கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து  43 கோடி மதிப்பில் இந்த பகுதிக்கு தூண்டில் வளைவு பாலம் அமைக்க கடந்த ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படாததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.