மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு சென்ற மீனவர்கள்!

மீன்பிடி தடைக்காலம் நிறைவு கடலுக்கு சென்ற மீனவர்கள்!

மீன்பிடி தடைகாலம் நேற்றுடன் முடிந்ததால் காசிமேடு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்கு சென்றனர். 

தமிழ்நாட்டில்  மீன்களின் இனப்பெரூக்க வளர்ச்சிக்காக ஏப்ரல் 14முதல் ஜீன் 14வரை 61நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். நேற்று மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இருந்த நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்தே கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆர்வமுடன் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சென்னை காசிமேடு பகுதியில் பெரும்பாலான மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை நள்ளிரவிலிருந்தே பூஜைகள் மேற்கொண்டு பூசனிக்காய், தேங்காய் உடைத்து  கடவுளை வழிபட்டு மகிழ்ச்சியாய் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதையும் படிக்க :அடுத்தக்கட்ட ஆளுமைகள்!