தொடங்கிய மீன்பிடி சீசன்.. 10 நாட்களில் அடிக்காத ஜாக்பாட் இன்று அடித்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி

நாகை மாவட்டம் கோடியக்கரையில் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தொடங்கிய மீன்பிடி சீசன்.. 10 நாட்களில் அடிக்காத ஜாக்பாட் இன்று அடித்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி

நாகை மாவட்டம்  கோடியக்கரையில் மீன்பிடி சீசன் தொடங்கியதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த 10 நாட்களாக கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு மிக குறைந்த அளவே மீன்கள் கிடைத்து வந்தன. இந்நிலையில், இன்று வழக்கம்போல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்களின் வலைகளில், அதிகளவிலான மீன்கள் சிக்கியுள்ளன. முரல்மீன், திருக்கைமீன், ஷிலா, மத்தி,சீலா, காலா, வாவல், முரல், திருக்கை உள்ளிட்ட மீன்கள் அதிகளவு கிடைத்திருப்பதால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள மீனவர்கள், இந்த வகை மீன்கள் கேரளாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் அதிக லாபம் கிடைக்கும் என மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.