பொதுமக்களின் நலனுக்காக ஐந்து நாட்கள் இலவச மருத்துவ முகாம்…

  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்துடன் தனியார் மருத்துவமனை இணைந்து பொதுமக்களின் நலனுக்காக ஐந்து நாட்கள் இலவச பொது சுகாதார மருத்துவ முகாம் இன்று முதல் தொடங்க உள்ளது.  

இன்று தொடங்க உள்ள இலவச பொது மருத்துவ முகாமில் உடல் எடை மற்றும் உயரம், இரத்த அழுத்தம், சீரற்ற இரத்த சக்கரை, வெப்பநிலை, துடிப்பு மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ மெட்ரோ இரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று சென்னை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் விம்கோ நகர் இரயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து நாளை மறுநாள் தியாகராய கல்லூரி, கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்திலும்,24 ஆம் தேதி உயர்நீதி மன்றம், செனாய் நகர் மெட்ரோவிலும், 27 ஆம் தேதி புது வண்ணாரப்பேட்டை, வடபழனியிலும், 29 ஆம் தேதி அரசினர் தோட்டம், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்திலும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களில் காலை 10 மணி  மதியம் 12 மணி வரையிலும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 6 மணி வரையிலும் முறையே நடைபெற இருப்பதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த இலவச பொது சுகாதார மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.