அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா... பூண்டி மாதா பேராலயத்தில் கொடியேற்றம்....

பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா கொடியேற்றம், பக்தர்கள் கூட்டமின்றி நடந்தது.

அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா... பூண்டி மாதா பேராலயத்தில் கொடியேற்றம்....

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா கொடியேற்றம் மாலை 6.30 மணி அளவில் பக்தர்கள் பங்கேற்காமல் நடந்தது.

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பேராலயங்களில் ஒன்றாகவும், உலகப் புகழ்பெற்ற கிறிஸ்துவ பேராலயமாகவும், வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக கிறிஸ்துவர்கள் தரிசிக்க விரும்பும் தலமாகவும் இருந்து வருகின்றது. இங்கு ஆண்டுதோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 9 தேதி வரை நடைபெறும்.

 இந்த ஆண்டு விழா கொடியேற்றம் மாலை 6.30 மணியளவில் நடந்தது. முன்னதாக  மாதாவின் படம் வரையப்பட்ட வண்ண கொடியுடன் பங்கு தந்தையர்கள் ஊர்வலமாக வந்து ஆலயத்தின் முன்பாக உள்ள கொடி கம்பத்தை அடைந்தனர். பேராலய அதிபர் பாக்கிய சாமி கொடியை புனிதம் செய்து கொடிமரத்தில் ஏற்றினார். 

இதில் பூண்டி மாதா பேராலய துணை அதிபர் ரூபன் ,பூண்டி மாதா தியான மைய இயக்குனர் சாம்சங், உதவி தந்தைகள் யுனிகோ, ஜான்சன், ஆன்மிக தந்தை அருளானந்தம் கலந்து கொண்டனர் .

பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு டிஎஸ்பி ராஜமோகன் திருக்காட்டுப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் சார்லிமேன் மற்றும் போலீசார் செய்திருந்தனர். கரோனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.