சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை...!

சேலம் விமான நிலையத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை இன்று தொடங்குகிறது. 

ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் விமான சேவை நடைபெற்று வந்தது. 

இதையும் படிக்க : முத்துராமலிங்க தேவர் ஆலய தேர் பவனி...!

ஆனால், கொரோனா காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து, சென்னை ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து இண்டிகோ நிறுவனம் விமான சேவையை இன்று தொடங்கியுள்ளது.