கொசஸ்தலை  ஆற்றில் வெள்ளப்பெருக்கு... ஆற்றைக் கடக்க வேண்டாம் என எச்சரிக்கை...

திருத்தணி அருகே உள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும்  ஆற்றை கடக்க வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசஸ்தலை  ஆற்றில் வெள்ளப்பெருக்கு... ஆற்றைக் கடக்க வேண்டாம் என எச்சரிக்கை...

ஆந்திரா அம்மா பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் உள்ள அம்மா பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த நீரானது, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. பள்ளிப்பட்டு பாலத்தை மூழ்கடித்தவாறு, வெள்ளம் சென்று கொண்டிருப்பதால், இவ்வழியே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு வட்டம் அருகிலுள்ள ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மா பள்ளி அணையிலிருந்து நேற்று(01.09.2021) இரவு 8. 30 மணி முதல்(02.09.2021) அதிகாலை முதல் 3.30 மணி நேரத்திற்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 1000 கன அடி நீர் திறக்க திறக்கப்பட்டுள்ளது அதன்பிறகு அங்கு  தொடர் மழையின் இருப்பின் இந்த தண்ணீர் அளவு
உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் நள்ளிரவில் பள்ளிபட்டு பாலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது, பள்ளிப்பட்டு  தாலுகா பகுதிகளில் செல்லும் கீழ் கல்பட்டறை, புண்ணியம்,நெடியம், செராக்கா பேட்டை, ஆகிய பகுதிகளில் செல்லும் கொசஸ்தலை ஆறு பகுதிகளில் வசிக்கும் அக்கரையோர பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தகவல் வருவாய்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் உள்ளனர். கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் செல்லும் பகுதிகளில் கண்காணிப்பில் தொடர்ச்சியாக ஈடுபட மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டரால் அல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.