முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் மலர் கண்காட்சி.. சென்னையில் முதன்முறையாக - தமிழக அரசு அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் முதன்முறையாக மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளில் மலர் கண்காட்சி.. சென்னையில் முதன்முறையாக -  தமிழக அரசு அறிவிப்பு

ஜூன் 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 முதல் 5ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3ம் தேதி சென்னையில் முதன்முறையாக நடைபெறும் கண்காட்சியில் புனே, பெங்களூரு, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் 200க்கும் மேற்பட்ட ரக  மலர்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், கருணாநிதி உருவ வடிவிலான மலர் அலங்காரமும், ஓராண்டு சாதனையை விளக்கும் வகையிலான மலர் அலங்காரமும் கண்காட்சி வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.