ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணிகள்...! அவதிப்படும் பயணிகள்..!

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணிகள்...! அவதிப்படும் பயணிகள்..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கொசத்தலை ஆற்று மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா என்.என்.கண்டிகை ஊராட்சி பகுதியில் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். மற்றும் கூலி தொழிலாளர்களும் அதிகம் உள்ளனர். இந்த ஊருக்கு வெளியில் கொசத்தலை ஆறு செல்கிறது. இதில் தண்ணீர் அதிகமாக சென்றதால்  தரை பாலம் முழுகி தண்ணீரில் அடித்துச் சென்றது.

மற்றும் விவசாயிகளை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இதற்கான 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2020இல் ஆற்று மேம்பால பணிகள் தொடங்கப்பட்டது.

தற்பொழுது  இந்த ஆற்று மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. விரைவான முறையில் ஆற்று மேம்பால பணி முடிவடையாமல் ஆமை வேகத்தில் செல்கிறது. 

மேலும் இந்த பகுதியில் ஆற்று மேம்பால பணி நடைபெறுகிறது மற்றும் பாதையில் செல்ல வேண்டும் என்று பெயர் பலகை எதுவும் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்கவில்லை இதே போல் ஆற்று மேம்பால பணி நடைபெறுவதால் இது மாநில நெடுஞ்சாலை என்பதால் இந்த பகுதியில் ஆற்று மேம்பாலம் பணி நடைபெறும் இரண்டு புறத்திலும் மின் கம்பங்கள் மின்சார விளக்குகள் வைக்கவில்லை.

இதனால் பொதுமக்களுக்கு இரவு நேரத்தில் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேம்பால பணி நடைபெறுவதால் தற்காலிக மாற்றுப் பாதை சாலை தரமானதாக அமைத்துக் கொடுக்கவில்லை மேடு பள்ளங்களாக ஆபத்து நிறைந்த பள்ளமாக சாலையாக உள்ளது.  இந்த சாலையில் சாலை தடுப்புகளும் இல்லை இதனால் இந்த பகுதியில் செல்ல வேண்டிய பொதுமக்கள் விவசாயிகள் கடும் அச்சத்துடன் இரவு நேரத்தில் செல்கின்றனர்.

இந்தப் பணி தொடங்கப்பட்ட ஆண்டு, இந்த பணி என்ன தொகைக்கு நடைபெறுகிறது?  இந்தப் பணி எப்போது முடியும், என்ற கால நிர்ணய விளக்க பெயர் பலகை இந்த பணியை மேற்கொண்டுள்ள அரசு ஒப்பந்ததாரர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவில்லை.

இதனை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.  முதலமைச்சர் அறிவிப்பு என்ற பெயரில் நடைபெறும் இந்த பாலப்பணிகள் பொதுமக்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.  ஆமை வேகத்தில் செல்லும் இந்த மேம்பால பணி வரைந்து முடிக்க வேண்டும். இந்த பாலத்தினால் பொது மக்களுக்கு உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு மேற்கண்ட குறைகள் உள்ள பணிகளை சரி செய்ய வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மேம்பால பணியை ஆமை வேகத்தில் செயல்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர்.

இதையும் படிக்க   |  போனஸ் அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள்!