"மிசாவையே சந்தித்த திமுகவுக்கு,... ஐ.டி. ரெய்டு எல்லாம் எம்மாத்திரம்"..? -உதயநிதி ஸ்டாலின்.

"மிசாவையே சந்தித்த திமுகவுக்கு,... ஐ.டி. ரெய்டு எல்லாம் எம்மாத்திரம்"..? -உதயநிதி ஸ்டாலின்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ. வி. கே. எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதையடுத்து அதற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. 

அப்போது,  இந்த கூட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும்,  தமிழக விளையாட்டு துறை அமைச்சரமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் .

அப்பொழுது அவர் பேசுகையில்,  "எங்களை யாராலும் அச்சுறுத்த முடியாது என்றும் மிசாவையே சந்தித்த இயக்கம் திமுக என்றும் எங்களுக்கு ஐடி ரைட் எல்லாம் எம்மாத்திரம்..?" என்றும் கூறினார். 

மேலும் "நாங்கள் எப்போதும் மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், மக்களுக்காக உழைக்கிறோம் மக்கள் கூடவே இருக்கிறோம் என்றும், ஆனால் அதிமுக அப்படி அல்ல . தேர்தலின் போது மட்டும் தான் அதிமுகவினர் மக்களை சந்திக்க வருவார்கள். ஆனால் திமுக எப்போதும் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்கும் என்று கூறினார். 

இதையும் படிக்க     ]  CAG அறிக்கை மூலம் யார் யார் ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என தமிழக முதல்வர் அறிவிப்பார்..! - மா.சுப்ரமணியம்

மேலும் , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியை எப்படி தோற்கடித்தீர்களோ அதேபோல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் தோற்கடிக்க வேண்டும் என கூறினார்.  இந்த நன்றியறிவிப்பு கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சார்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். 

அதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம், மரப்பாலம் ஆகிய இடங்களிலும் நடந்த நன்றியறிவிப்பு கூட்டங்களிலும் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதையும் படிக்க     ]  " பேப்பரே இல்லாத இடத்தில் பேனாவை எதற்கு வைக்கனும்..?" - நடிகை கஸ்தூரி பேச்சு.