தமிழக வரலாற்றில் முதன்முறை : சட்டப்பேரவை நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பு!

தமிழ்நாட்டு சட்டப்பேரவை வரலாற்றில், முதன்முறையாக கேள்வி நேரமானது நேரலையில் ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. 

தமிழக வரலாற்றில் முதன்முறை : சட்டப்பேரவை நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பு!

தமிழகத்தில் நடப்பாண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது நேற்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் துவங்கிய இப்பேரவை கூட்டத்தை,  கொரோனா காரணமாக இரு நாட்களில் நிறைவு செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று நடைபெற்று வரும் கேள்வி நேரமானது தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதன்முறையாக நேரலையில் ஒளிரப்பப்படுகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

அதன்படி, மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து வண்டலூர் வரை, மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என பல்லாவரம் தொகுதி எம். எல்.ஏ கருணாநிதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ளதால், மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க வேண்டிய அவசியமிருப்பதாக குறிப்பிட்டார். இதுதொடர்பான விரிவான அறிக்கை அரசின் ஆய்வில் இருப்பதாகவும், ஆய்வுக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.