போஸ்பரா பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள புலி... தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் தீவிரம்...

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

போஸ்பரா பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள புலி... தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் தீவிரம்...

கடந்த 19 நாட்களாக வனத்துறையினருக்கு சிக்காமல் போக்கு காட்டி வரும் T 23 புலி, மசினகுடி வனப்பகுதியிலிருந்து, நேற்று கூடலூர் அருகே உள்ள போஸ்பரா பகுதிக்கு இடம் பெயர்ந்தது கண்காணிப்பு  கேமராவில் பதிவாகியுள்ளது.  இதனையடுத்து, போஸ்பரா பகுதியில் வனத்துறையினர் துப்பாக்கியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மருத்துவக் குழுவினரும் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில்,  அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என ஊராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. T23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட விலங்குகளையும் அடித்து கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.