முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பழனியப்பன்...

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பழனியப்பன்...

ஜெயலலிதா ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பழனியப்பன். அவருடைய மறைவுக்குப் பின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அமமுகவில் இணைந்த பழனியப்பன் துணை பொதுச்செயலாளராக இருந்து வந்தார். பின்னர் டி.டி.வி. தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியால் பழனியப்பன் தி.மு.க. வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர்  தி.மு.கவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில்பாலாஜி உள்ளிட்ட  திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.