அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி - 2 ஐ.ஏ.எஸ் அகாடமி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக, சென்னையைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி - 2 ஐ.ஏ.எஸ் அகாடமி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு

கடலூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரசு வேலைக்காக போராடி கொண்டிருந்த இவருக்கு நிமிர் ஐ.ஏ.எஸ் அகாடமி உரிமையாளர் ஜான்சன் மற்றும் அக்னி அகாடமி உரிமையாளர் சிவக்குமார் அறிமுகமாகியுள்ளனர்.

இதையடுத்து, அரசு வேலை வாங்கி தருவதாக சிலம்பரசனிடம் இருந்து சிவகுமார் ரூபாய் 10 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.ஆனால் அரசு  வேலை குறித்து எந்தவித தகவலும் வராததால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிலம்பரசன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி, தற்போது ஐ.ஏ.எஸ் அகாடமி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  சிவக்குமார் தாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கமான நண்பர் எனக்கூறி மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.