இனி தப்பிக்கவே முடியாத நிலையில் ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா

ஜி.பி.முத்து, ரவுடிபேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டும் என மக்கள் அதிகார இயக்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளர்.

இனி தப்பிக்கவே முடியாத நிலையில் ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா
டிக் டாக் மூலம் இணையத்தில் பிரபலமான ரவுடி பேபி சூர்யா, ஜி.பி. முத்து தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமூகத்தை சீரழிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டு ரவுடி பேபி சூர்யா, ஜி.பி.முத்து உள்ளிட்ட 8 பேரின் சமூக வலைத்தள பக்கங்களை முடக்குமாறு புகார் எழுந்துள்ளது.
 
சமூக வளைதல பக்கங்களில் ரவுடி பேபி சூர்யா, ஜி.பி.முத்து, திருச்சி சாதனா உள்ளிட்ட டிக்டாக் பிரபலங்கள் ஆபாசமாக பேசி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
 
அவர்களுக்கிடையே உள்ள பிரச்சனைகளை ஆபாச பேச்சுகள் மூyம், யூடியூப் பக்கங்களில் வீடியோவாக வெளியிட்டு தங்களை இன்னும் பிரபலப்படுத்திக் கொள்வதை இவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனை ஜி.பி. முத்து வீடியோவை இணையவாசிகள் ரசித்தாலும், அதிகளவில் எதிர்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன.
 
இந்நிலையில் பள்ளி தாளாளர் முஹைதீன் இப்ராஹிம் என்பவர் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் மீது விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இணையத்தில் ஆபாசமாக பேசி வரும் ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டும் என மக்கள் அதிகார இயக்கம், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளது.