கொரோனா அதிகமானாலும் விநாயகர் சதூர்த்தி விழா கண்டிப்பாக நடக்கும்.! -இந்து முன்னணி அறிவிப்பு.! 

கொரோனா அதிகமானாலும் விநாயகர் சதூர்த்தி விழா கண்டிப்பாக நடக்கும்.! -இந்து முன்னணி அறிவிப்பு.! 

கொரோனா தொற்று குறைந்துள்ளது, ஒரு வேளை தொற்று அதிகமானாலும் விநாயகர் சதூர்த்தி விழா கண்டிப்பாக நடக்கும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இந்து முன்னணி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் சோலைஹால் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது, இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு வரும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்,

 இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியன் பேசும்போது, "விநாயகர் சதூர்த்தி விழாவை இந்த ஆண்டு சிறப்பாக நடத்த உள்ளோம், தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைக்க உள்ளோம், கடந்த கொரோனா காலங்களில் அனுமதி இல்லாததால் விநாயகர் சதூர்த்திக்கு சிலை செய்பவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசியவர், "விநாயகர் சிலைகளை கொரோனா காலம் என்பதால் செய்யவில்லை, தற்போது படிப்படியாக செய்ய தொடங்கி விட்டனர், தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளது, ஒரு வேளை தொற்று அதிகமானால் விநாயகர் சதூர்த்தி விழா கண்டிப்பாக நடக்கும்,  ஆனால் பொது நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து பின்னர் ஆலோசணை செய்து முடிவு எடுக்கப்படும்" எனக் கூறினார்.