தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை...

தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை...

சென்னையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டீசல் விலை 90 ரூபாயை நெருங்கி வருவதால், வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் தினசரி பெட்ரோல் - டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 23 காசுகள் உயர்த்தப்பட்டு, 95 ரூபாய் 51 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்த்தப்பட்டு 89 ரூபாய் 65 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை 90 ரூபாயை நெருங்கி வருவதால், பெட்ரோல், டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிக்கலை சந்தித்து வரும் நிலையில், பெட்ரோல் டீசல், விலை உயர்வு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.