7 பேரின் வலியை உணருங்க குடியரசுத்தலைவரே! கதறும் கௌதமன்

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலையில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டை தமிழ் பேரரசு கட்சி வரவேற்பதாகவும், அவர்களின் வலியை குடியரசுத்தலைவர் உணர்ந்து விடுதலை செய்ய வேண்டும் என கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

7 பேரின் வலியை உணருங்க குடியரசுத்தலைவரே!  கதறும் கௌதமன்

ஈழத்தமிர்கள் விடுதலை குறித்து தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் கௌதமன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கௌதமன், தமிழகத்தில் ஈழத்தமிழர் தஞ்சம் புகுந்த நிலையில் சிலர் பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் செய்தார்கள் என 80 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

துன்புறுத்தல் இல்லாமல் இருந்தாலும்  அவர்களின் சிறை தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ளனர். எனவே  போர் கால அடிப்படையில் அவர்களை அவர்கள் குடும்பத்தினருடன் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்வதாகவும், சிலர் தற்கொலை முயற்சிலுத் ஈடுபட்டு வருவது வேதனையளிப்பதாகவும் கூறினார்.

சட்டத்துறை அமைச்சர் எங்கள் கோரிக்கை அனைத்தையும் கணிவுடன் கேட்டு,  சட்ட ரீதியாக என்ன முயற்சி எடுக்க முடியுமோ அதை எடுப்பேன் என்றும், அதிகாரிகளை உடனே தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் தெரிவித்தார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்தும் பேசினோம். அதில் 7 பேர் விடுதலையில் தமிழக அரசு எடுத்துள்ள நிலைபாடை நாங்கள் வரவேற்பதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவின் படி செயல்படாமல், ஆளுநர் குடியரசுத்தலைவரிக்கு பரிந்துரை செய்வதாக கூறி தவறு செய்துவிட்டார். இல்லையெனில் ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் சட்டமன்றத்தை கூட்டி அரசே விடுதலை செய்திருக்கும் என அமைச்சர் கூறியதாகவும், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம், ஜனாதிபதி அவர்களுக்கு, சிறைதண்டனை பெற்றுள்ளவர்கள் வலியை உள்வாங்கி சட்ட ரீதியாக முடிவு செய்ய வேண்டும் எனவும் கௌதமன் கேட்டுக்கொண்டார்.