வேலூர் முள்ளு கத்திரிக்காய் இராமநாதபுரம் மிளகாய்க்கு புவிசார் குறியீடு

வேலூர் முள்ளு கத்திரிக்காய்   இராமநாதபுரம் மிளகாய்க்கு புவிசார் குறியீடு

வேலூர் முள்ளு கத்திரிக்காய்

வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள இலவம் பாடி, ஒடுக்கத்தூர், குருவ ராஜபாளையம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் முள்ளு கத்திரிக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டின் பாரம்பரியமான வேலூர் முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு  மிளகாய்க்கு புவிசார் குறியீடு | Tamil News TN's Vellore spiny brinjal and  ...

இராமநாதபுரம் குண்டு மிளகாய்

அதே போல ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மிளகாய் அதன் தனித்துவமான காரத்தன்மை மற்றும் செழுமையான சுவைக்குப் பேர் போனது. இந்த குண்டு மிளகாயைச் சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகரிலும் அதிகளவில் சாகுபடி செய்து வருகிறார்கள்.

வேலூர் முள்ளு கத்திரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார்  குறியீடு.. கர்நாடகாவுடன் போட்டி! - Bhoomitoday

மேலும் படிக்க | தமிழ்நாட்டு மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அண்ணாமலை

இந்நிலையில் முள்ளு கத்திரிக்காய்க்கும், குண்டு மிளகாய்க்கு விவசாயிகள் புவிசார் குறியீடு வேண்டும் என விண்ணப்பத்து இருந்தனர். இப்போது இவை இரண்டுக்கும் புவி சார் குறியீடு அறிவிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.இந்த புவிசார் குறியீட்டிற்கான சான்றிதழை அம்மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கப்படும்.