தடுப்பூசி போட்டால் குலுக்கல் முறையில் பரிசு... ஆர்வமுடன் தடுப்பூசி முகாமில் பங்கேற்ற மக்கள்...

போளூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமில் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டவர்களுக்கு  குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கியது பேரூராட்சி நிர்வாகம்.

தடுப்பூசி போட்டால் குலுக்கல் முறையில் பரிசு... ஆர்வமுடன் தடுப்பூசி முகாமில் பங்கேற்ற மக்கள்...

திருவண்ணாமலை மாவட்டம் போளூர்  பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசியை முகாமில் ஆர்வத்துடன்  கலந்து கொண்டு  தடுப்பூசி போட்டுக் கொண்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் பரிசுகள் வழங்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி போளூர்  பேரூராட்சி செயல் அலுவலர் முஹம்மது ரிஸ்வான் தலைமையில் போளூர் பேருராட்சி பகுதியில் 11 இடங்களில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன்  தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.

தடுப்பூசி செலுத்தி கொண்ட பொதுமக்களுக்கு பேருராட்சி நிர்வாகமும்  அனைத்து வியாபாரிகள் சங்கமும் இணைந்து  குலுக்கல் முறையில் பரிசுகள் அறிவித்தது  அதன்படி போளூரில் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குலுக்களில்  முதல் பரிசு 2 நபர்களுக்கு மின்விசிறிகள் வழங்கப்பட்டது.  

மேலும் பதினொரு நபர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது பரிசுகளை போளூர் பேரூராட்சி செயல் அலுவலர் முஹம்மது ரிஸ்வான் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் சண்முகம், ஹரி ஆகியோர் வழங்கினார்கள். உடன் பேருராட்சி தலைமை எழுத்தர் இசாத்  துப்புரவு ஆய்வாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.