செங்கோலை வைக்கும் மத்திய அரசு...ராஜராஜசோழன் சிலையை ஏன் உள்ளே வைக்கவில்லை? - சீமான் கேள்வி

செங்கோலை வைக்கும் மத்திய அரசு...ராஜராஜசோழன் சிலையை ஏன் உள்ளே வைக்கவில்லை? - சீமான் கேள்வி

செங்கோல் கொடுப்பதால் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் நாம் தமிழர் கட்சியின் 65 அடி உயரக் கொடியை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானத்தை சாமானியர்கள் வாங்கிக் குடிக்க முடியாததால் குறைந்த விலைக்கு கிடைக்கும் மதுவைத் தேடிச் செல்வதாக கூறினார்.

அனைத்து மாநிலங்களிலும் கள் இறக்குவதற்கு அனுமதி இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கள் இறக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். அதேசமயம், டாஸ்மார்க்கை ஒழிப்போம் என்று தற்போதைய முதலமைச்சர் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர்  தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை அவர்கள் வாய் திறக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க : அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீடுகளில் சோதனை...பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்!


தொடர்ந்து பேசிய அவர், செங்கோல் கொடுப்பது ஏமாற்று வேலை என்றும், இதனால் தமிழர்களுக்கு எவ்வித பயனும் இல்லை என்றும்  கூறினார். செங்கோலை நாடாளுமன்றத்திற்குள் வைக்கும் மத்திய அரசு ராஜராஜ சோழன் சிலையை ஏன் வெளியே வைத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். 

கரூரில் நடைபெறும் வருமான வரிச் சோதனை குறித்த கேள்விக்கு, இருதரப்பிலுமே தவறு இருப்பதாகக் கூறிய சீமான்,   வருமான வரித் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவித்துவிட்டு வரவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.