"அண்ணாமலை செல்வது பாதயத்திரை அல்ல; ரத யாத்திரை" திருநாவுக்கரசர் கருத்து!

"அண்ணாமலை செல்வது பாதயத்திரை அல்ல; ரத யாத்திரை" திருநாவுக்கரசர் கருத்து!

அண்ணாமலை செல்வது பாதயத்திரை அல்ல ரத யாத்திரை திருநாவுக்கரசர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது. இதனால் உண்மை என்றைக்கும் வெற்றி பெறும் என்பது நிருபனமாகியுள்ளது. இத்தீர்ப்பின் வழியாக நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.  ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பணியாற்ற ஏற்படுத்தப்பட்ட தடை தற்போது அகன்று உள்ளது. நாடாளுமன்றத்தில் மீண்டும் செயல்படக் கூடிய வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள், நடுநிலை பொதுமக்கள் உச்சநீதிமன்றம் உத்தரவை கொண்டாடுகின்றனர் என தெரிவித்தார். 

மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். திமுக தலைவர் ஸ்டாலின் கூட ராகுல்காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என கூறி உள்ளார். கூட்டணி கட்சிகள் மத்தியில் ராகுல்காந்திக்கு ஆதரவு பெருகி வருகிறது. கூட்டணியில் உள்ள ஒரு சில கட்சிகள் தேர்தல் முடிந்த பின் கண்டிப்பாக ஆதரிக்க கூடும். கூட்டணியில் அதிக இடங்களை பெற கூடிய வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு தான் உள்ளது. மாநிலங்களில் கட்சிகள் நின்றாலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தான் நிற்க முடியும் என தெரிவித்தார்.

மேலும், இந்தியா கூட்டணி பெயர் வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என தெரிவித்த அவர் பெயர் வைப்பற்கு  எல்லாம் நீதிமன்றத்தை கேட்டு வைக்க  முடியாது எனவும் இந்தியா என்ற பெயரை தவறாக தான் பயன்படுத்த கூடாது என தெரிவித்தார். 

தொடர்ந்து, அண்ணாமலை பாத யாத்திரையாக போகவில்லை. பஸ் யாத்திரையாக தான் செல்கிறார் என தெவித்த அவர்  நகரங்களில் பஸ்சில் இருந்து இறங்கி 10 நிமிடங்களில் பேசிவிட்டு அடுத்த இடத்திற்கு செல்கிறார் எனவும் அவர் நடந்து செல்வதை விட வாகனங்களில் செல்லும் நேரங்கள் தான் அதிகம் எனவும் தெரிவித்தார். 

பா.ஜ.க.வினர் காசு தந்து கூட்டத்தை அழைத்து வருகிறார்கள் என குற்றம் சாட்டிய அவர் அந்த கூட்டத்தில் மக்கள் நிரம்பி வருகிறார்கள் எனவும்  அது பாத யாத்திரை அல்ல ரத யாத்திரை தான் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிக்க:மகளிர் உரிமைத் தொகை; 2 கட்டமாக விண்ணப்பம் விநியோகம்!