துபாய் மற்றும் இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.2.68 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்..

துபாய் மற்றும் இலங்கையிலிருந்து சென்னை வந்த 2 விமானங்களில் ரூ.2.68 கோடி மதிப்புடைய 5.06 கிலோ தங்கம் மற்றும் 15 ஐபோன்கள்,12 பழைய  லேப்டாப்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாய் மற்றும் இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.2.68 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்..

துபாயிலிருந்து வந்த விமானம் மற்றும் இலங்கையிலிருந்து வந்த விமானம் அடுத்தடுத்து சென்னை பன்னாட்டு விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனை செய்தனர்.

அப்போது சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சோ்ந்த 10 ஆண் பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன்படி அவா்களை நிறுத்தி சோதனை செய்த அதிகாரிகள், அவா்கள் வைத்திருந்த பழைய லேப்டாப்களை திறந்து பாா்த்து சோதனை செய்தனர்.

அந்த லேப்டாக்களுக்கு அடியில் தங்க பசைகளை மறைத்து வைத்திருந்தனா். அதோடு சிலா் தங்களுடைய உள்ளாடைகளுக்குள்ளும் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தனா். மேலும் சிலா் தங்களுடைய சூட்கேஸ்களுக்குள் ஐபோன்களை மறைத்து வைத்திருந்தனா்.

10 பயணிகளிடமிருந்து 5.06 கிலோ தங்கம், 15 ஐபோன்கள், 12 பழைய லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவைகளின் சா்வதேச மதிப்பு ரூ.2.68 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து 10 பயணிகளையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.