வேறொரு சமுதாயத்தை சேர்ந்த 110 பேருக்கு அரசு சார்பில் வீட்டு மனை.. அப்பகுதி மக்கள் சாலை மறியல்!!

திருத்தணி அருகே  தாங்கள் வசிக்கும் பகுதியில் மற்றொரு பிரிவினருக்கு இடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக ஊர்மக்கள் போராட்டம் நடத்தினர்.

வேறொரு சமுதாயத்தை சேர்ந்த 110 பேருக்கு அரசு சார்பில் வீட்டு மனை.. அப்பகுதி மக்கள் சாலை மறியல்!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ராஜா நகரம் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அப்பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த 110 பேருக்கு அரசு சார்பில் வீட்டுமனை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நிலத்தை அளந்து கொடுக்கவில்லை என்று மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களுக்கு விரைவாக வீட்டுமனையை அளந்து வழங்க வேண்டும் அல்லது வீட்டுமனை கொடுக்கப்பட்ட நபர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் நிலத்தை அளந்து கொடுக்க 400 போலீசார்களுடன் நிலத்தை அளக்க அந்த ஊருக்குள் சென்றனர்.

அப்போது அதற்கு எதிரிப்பு தெரிவித்த 10 பேரை முதல் நாளில் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் அனைவரும் தொடர்ந்து எதிரிப்பு தெரிவித்து 2ம் நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். வேறு பகுதியில் இடம் ஒதுக்கி தர வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.