தமிழகத்தில் அடுத்தடுத்து திறக்கப்படும் டைடல் பார்க்... இளைஞர்களை குஷியாக்கிய அசத்தல் திட்டம்...

தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைப் பெரிய அளவில் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல முக்கியத் திட்டங்களை ஸ்டாலின் தலைமையிலான அரசு கையில் எடுத்துள்ளது.

தமிழகத்தில் அடுத்தடுத்து திறக்கப்படும் டைடல் பார்க்... இளைஞர்களை குஷியாக்கிய அசத்தல் திட்டம்...

தமிழ்நாட்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் இருந்தும் நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் தொழில் துவங்கவும், முதலீடு செய்யவும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பும் ஐடி மற்றும் டெக் துறை வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் அதற்கான கட்டமைப்பை உருவாக்க புதிய திட்டத்தைக் கோவை முதலீட்டு மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

டைடல் பார்க் சென்னையில் முதல் முறையாக டைடல் பார்க் திறக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் இத்திட்டம் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் பெரியது. இதற்கு முக்கியக் காரணம் 2000ல் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஐடி பார்க்-களில் ஒன்று சென்னையில் இருக்கும் டைடல் பார்க் என்பதால் தான்.

நியோ டைடல் பார்க் இந்த வெற்றியை மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்பதற்காகக் கோவையில் முதலீட்டு மாநாட்டில் சென்னையில் புதிதாகப் பின்டெக் சிட்டி மற்றும் தமிழ்நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் நியோ டைடல் பார்க் கட்ட திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

ஐடி துறை வளர்ச்சி தமிழ்நாட்டின் ஐடி துறை வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்கு வகித்த டைடல் பார்க் தற்போது தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் திறக்கப்படும் காரணத்தால் ஐடி துறை வல்லுனர்கள் புதிய தொழில் துவங்கவும், ஐடி துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் பெரிய அளவில் உயரும்.

TIDEL பார்க் லிமிடெட் TIDEL பார்க் லிமிடெட் நிறுவனம் TIDCO மற்றும் ELCOT ஆகிய அரசு அமைப்பின் கூட்டணி அமைப்பு. இந்த அமைப்பு தான் தமிழ்நாடு முழுவதும் ஐடி பார்க்-களை நிறுவி வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்தச் சில வருடத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் டைடல் பார்க் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை இதைத் தொடர்ந்து கோவை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் கோவையில் வார்ப்புத் (Casting) தொழில்களுக்கான சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ், பொள்ளாச்சியில் தென்னை நார் பதப்படுத்துதல் குழு, சூலூர் பகுதியில் புதிதாகத் தொழிற்துறை பூங்கா அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.