பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்புத் திட்டமாக அறிவித்த தமிழக அரசு...

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்புத் திட்டமாக தமிழக அரசு அறிவித்தது.

பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்புத் திட்டமாக அறிவித்த  தமிழக அரசு...

இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதியைக் கொண்டு செல்லும் வகையில் பாரத் நெட் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராமங்களையும் சென்றடையும் வகையில் 50 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு இணையவசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்புத் திட்டமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இந்தக் குழு கூடி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.  இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு சொந்தமான எந்தவொரு இடத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தி தரும் இந்த திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள எந்த துறையிடம் அனுமதி பெற தேவையில்லை என்றும்எந்தவித மின்சாரக் கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்த எந்த முன் அனுமதியும் பெற தேவையில்லை என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

மின்சாரத்துறை, நெடுஞ்சாலைகள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பணியாற்ற தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.