தமிழகம் ழுழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகளை மூட தமிழக அரசு உத்தரவு...

தமிழகம் ழுழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகளை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகம் ழுழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகளை மூட தமிழக அரசு உத்தரவு...

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் ழுழுவதும் உள்ள 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை மூடவும், மினி கிளினிக்குகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆயிரத்து 800 மருத்துவர்கள் மற்ற திட்டங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கும் போது ஓராண்டு காலம் என்று மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டதாகவும், தற்பொழுது வருமுன் காப்போம், மக்களைத்தேடி மருத்துவம் போன்ற புதிய திட்டங்கள் செயல்பட்டு வருவதால், அம்மா மினி கிளினிக்குகள் செயல்பட அவசியமில்லை என சுகாதார துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.