தமிழில் பெயர் எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத தமிழக அரசு உத்தரவு ...

பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழில் பெயர் எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத தமிழக அரசு உத்தரவு ...

சட்டப்பேரவையில் அறிவித்தபடி, முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்துகளையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், மாணவர்களின் தொடக்கக் கல்வி முதல் கல்லூரி காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, முதலில் மாணவர்களது பெயரில் தமிழை சேர்ப்பது சிறப்பானதாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வையில் படும் வகையில் தமிழின் பெருமையை சுட்டிக்காட்டியும், முன்னிறுத்தியும், தமிழில் கையொப்பம் இடுவது பெருமைப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது