அசத்தல் அரசாணை வெளியிட்ட தமிழக அரசு: ஆசிரியர்கள் உற்சாகம்..

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் ஆயுள்வரை செல்லும் என்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அசத்தல்  அரசாணை வெளியிட்ட தமிழக அரசு:  ஆசிரியர்கள் உற்சாகம்..

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் ஆயுள்வரை செல்லும் என்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET ) நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லும் என்ற விதியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ( NCTE ) திருத்தியது. அதன்படி, TET தேர்வு சான்றிதழ் ஆயுள்வரை செல்லும் என்று NCTE அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியமும் TET தேர்வுக்கான சான்றிதழ் ஆயுள் வரை செல்லும் என்று அறிவித்தது.

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்புக்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. TET தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லும் என்ற அரசாணை உடனடியாக அமலுக்கு வருவதால் தமிழ்நாட்டில் சுமார் 84,000 பேர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் TET தேர்வில் வெற்றி பெற்றும் ஆசிரியர் பணி கிடைக்காதவர்களின் வயது உச்சவரம்பை நெருங்கும் நிலையில் அவர்களுக்கு உடனடியாக பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.