" ஆளுநர் அவர்களே நீங்களாக ஓடி விடுங்கள் இல்லை என்றால் விரட்டி அடிக்க படுவீர்கள் " - ஆர்.எஸ்.பாரதி.

" ஆளுநர் அவர்களே நீங்களாக ஓடி விடுங்கள் இல்லை என்றால் விரட்டி அடிக்க படுவீர்கள் " - ஆர்.எஸ்.பாரதி.


அரியலூரில் மாவட்ட திமுக சார்பில்  கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் அமைப்பு  செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசும்போது திமுகவை அழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் அழிந்து விட்டார்கள் என்று கூறினார். 
.
அதோடு,  கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ள கட்சி திமுக என்றும்,   திமுகவோடு யார் மோதினாலும் அவர்களுக்கெல்லாம் கல்லறைகள் கட்டி அந்த கல்லறையை திறந்து வைப்பதும்  நாங்களா தான் இருக்கிறோம்
என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், " ஆளுநர் அவர்களே நீங்களாக ஓடி விடுங்கள் இல்லை என்றால் விரட்டி அடிக்க படுவீர்கள் இதை மிரட்டுவதற்காக கூறவில்லை; ஆளுநர் அவர்களை நீதிமன்றத்திலே நிறுத்தி அவரை ஓட ஓட விரட்டுவதற்கு திமுக சட்டத்துறை தயாராகிவிட்டது  என்றும் கூறினார். 

மேலும், திமுகவை அழிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து தான் போனார்கள் எனக் கூறியவர், " திமுகவை மூட்டை பூச்சியை நசுக்குவது போல் நசிக்குவேன் என ராஜாஜி கூறினார் ஆனால் அவர்தான் எங்கள் கூட்டத்திற்கு வந்தாரை ஒழிய அவரை தேடி நாங்கள் செல்லவில்லை;இது தெரியாமல் நேற்றைக்கு வந்த ஆளுநர் திமுக வை பற்றி பேசுகிறார்', என்றும் சாடினார்.

இதையும் படிக்க       | ”யார் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை விட, யார் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் தேவை” கனிமொழி பேச்சு!

அதையடுத்து பேசிய அவர், கூறுகையில், . முதலமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று வந்ததை கொச்சைப் படுத்தி ஆளுநர் பேசியதாகவும்,  இது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என்றும் காட்டம் தெரிவித்தார். 
 மேலும்,  159 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை காண அனைத்து வசதிகழும், மக்கள்  கொடுக்கும் வரிப்பணத்தில் தான் செய்து தரப்படுகிறது என்றும், இப்படி  தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு அதில் சாப்பிட்டுக் கொண்டு அந்த வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்திக் கொண்டு நாட்டு மக்களை காட்டிக் கொடுப்பேன் என்று சொன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா ? எனவும்  விமர்சித்தார். 

மேலும், " இதுவரை யாரும் செய்யாத சாதனையை தமிழக முதல்வர் செய்துவிட்டார் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் ரவி ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை  வெளியிடுகிறார்; இது எவ்வளவு பெரிய  தேச துரோகம்?" என சாடினார்.

தொடர்ந்து பேசுகையில்,  இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் எடப்பாடி தங்கமணி வேலுமணி விஜயபாஸ்கர் மீது ஜார்ஜ் சீட் போடப்பட்டு வருகிறது என்று ,குறிப்பிட்ட அவர்,  இதையெல்லாம் புரிந்துகொண்டு ஆளுநர் ஒழுங்காக மரியாதையாக ராஜினாமா செய்து விட்டு சொந்த மாநிலத்திற்கு சென்று விட வேண்டும் என்றும், இல்லையென்றால் நாகலாந்தில் ஏற்பட்ட கதி ஏற்படும் எனவும்  கூறினார். கூட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க       |   இனி சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டம்...அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!