”நீட் விவகாரத்தில் ஆளுநரின் பேச்சு அறியாமையை காட்டுகிறது” அப்பாவு பேச்சு!

”நீட் விவகாரத்தில் ஆளுநரின் பேச்சு அறியாமையை காட்டுகிறது” அப்பாவு பேச்சு!

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு அறியாமையை காட்டுவதாக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் பயணிகள் நிழற்குடை கட்ட அடிக்கல் நாட்டுதல், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குதல் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்கம் என முப்பெரும் விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டார். 

இதையும் படிக்க : இஸ்ரோ அறிவியாலளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்...!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதால், நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், பெற்றோர்கள் நீட் வேண்டாம் என்று சொல்லும் போது அதனுடைய நன்மை தீமைகளை ஆளுநர் ஆய்வு செய்து சொல்லலாம். ஆனால் ஆணவத்தில் நான் கையெழுத்து போடமாட்டேன் என்று சொல்வது தேவையில்லாதது என்று கூறினார்.

மேலும் நீட்க்கு எதிராக இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போது, ஆளுநர் கையெழுத்து போடாமல் குடியரசு தலைவரிடம் அனுப்பி வைத்துவிட்டு, தற்போது குடியரசு தலைவரிடம் இருக்கின்ற ஒரு பிரச்சனைக்கு நான் கையெழுத்திட மாட்டேன் என்று ஆணவமாக பேசுவது நியாயமா என்று எனக்கு தெரியவில்லை. அதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.