அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து...பயணிகள் அலறி அடித்து ஓட்டம்...!

அரசு பேருந்து டயர் வெடித்து பயணிகள் அலறி அடித்து ஓட்டம்... ! சாயல்குடி அருகே நிறுத்தபட்டதால் பரபரப்பு நிலவியது...!

அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து...பயணிகள் அலறி அடித்து ஓட்டம்...!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து பணிமனையில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து, அரசு பள்ளி அருகே வந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. அதனால் பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு கீழே இறங்கி சென்றனர். இதனால் பரபரப்பு நிலவியது. 

52 பயணிகளுடன, அரசு பேருந்து சாயல்குடி அருகே வந்த போது முன்பக்க டயர் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதனால் பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். பின்னர் உடனடியாக டிரைவர் பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக இறங்கி சென்றனர். பேருந்து ஓட்டுனர் சாதுரியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் காப்பாற்றப் பட்டனர்.

ராமேஸ்வரம் பணிமனையில் இருந்து மூன்று மணி நேரத்திற்கு பின்னர் மாற்று டயர் வந்த பின்னர், பேருந்து மீண்டும் திருச்செந்தூருக்கு குறைந்த அளவிலான பயணிகளுடன் சென்றது. இதுகுறித்து, நீண்ட தூர சுற்றுலா வழிபாட்டு தலங்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து, முறையான பராமரிப்பின்றி அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், பேருந்தை   இயக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.