குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - தேர்வாணையம் அறிவிப்பு!

குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - தேர்வாணையம் அறிவிப்பு!

குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்க்காணல் எதுவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதால், இதற்கு தேர்வுகள் மத்தியில் அதிகம் வரவேற்பு காணப்படும். 

இதையும் படிக்க : 2024ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் - விஜய் வசந்த எம்.பி பேட்டி!

அதன்படி, 7,301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமான நிலையில், 2023 பிப்ரவரி மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால் அப்போதும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. மீண்டும் மார்ச் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, மார்ச் மாதம் தொடங்கி ஒரு வாரம் முடிந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகததால், #WeWantGroup4Results என்னும் ஹேஷ்டேக் நேற்று (மார்ச் 8) இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.