வங்க கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது...

வங்க கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று நள்ளிரவு, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது...

வடமேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு - மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ள ’குலாப் புயல்’, கடந்த 6 மணி நேரத்தில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கில் சுமார் 270 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே 330 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

மேலும் புயலானது மேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை களுக்கு இடையே  கலிங்கப்பட்டினம் மற்றும் கோபால்பூர் பகுதிக்கு இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

புயல் காரணமாக பலத்த காற்று வீச வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்திட வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. புயலுக்கு பிறகான மீட்புப்பணிகளை தயார் நிலையில் வைத்திடவும் அரசு வலியுறுத்தியுள்ளது.அதன்படி ஒடிசா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.