"அதிமுக பாஜக கூட்டணி; கணவன்-மனைவி உறவு" எச். ராஜா பேச்சு!!

"அதிமுக பாஜக கூட்டணி; கணவன்-மனைவி உறவு" எச். ராஜா பேச்சு!!

மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச். ராஜா சனாதன தர்மம் குறித்தும், அதிமுக-பாஜக கூட்டணி குறித்தும் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது," சந்தான தர்மம் நிலையானது. வெளிநாட்டு ஆய்வாளர் மேக்ஸ் மூல் ஆய்வில் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரிவித்துள்ளார். வள்ளுவர் தனது குரலில் நான்கு வகையான ஜாதிகளை அந்தணர், அரசர், வாணிகர், வேளாளர் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது பற்றியெல்லாம் வைரமுத்துவுக்கு தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு வள்ளுவரை வைத்து பதில் அளித்துள்ளார்" என பேசியுள்ளார்

மேலும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக இடையிலான தேர்தல் கூட்டணி குறித்து பொழுது, "கணவன் மனைவிக்கு தினமும் ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, பாஜக அதிமுக உறவு என்பது கணவன் மனைவி போன்றது என்று கூறினார். குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள் வரத்தான் செய்யும்" என பேசியுள்ளார்.

இதையும் படிக்க || பள்ளியில் வழங்கப்படும் காலை உணவில் தீண்டாமை... கலெக்டர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!