பேருந்தை ஓட்டும்போது மாரடைப்பு - மரணிக்கும் தருவாயிலும் 30 உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர்...

பேருந்தை இயக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணிக்கும் தருவாயிலும் சாமர்த்தியமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் 30 உயிர்களை காப்பாற்றியுள்ளார்.

பேருந்தை ஓட்டும்போது மாரடைப்பு - மரணிக்கும் தருவாயிலும் 30 உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர்...

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி காலை 6 மணிக்கு கொடைக்கானல் வரை செல்லும் அரசு பேருந்தில் நேற்று வழக்கம் போல ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

 பேருந்து குரு தியேட்டர் சிக்னல் அருகில் சென்று கொண்டிருந்த போது சற்று நிலை தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் நடத்துனர், ஓட்டுநர் ஆறுமுகத்திடம் கேட்டபோது திடீரென சாலையில் ஓரத்தில் நிறுத்தி ஸ்டேரிங் மீது விழுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நடத்துனர் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்த நிலையில், அங்கு வந்த வந்தவர்கள் ஆறுமுகத்தை பரிசோதித்த போது மாரடைப்பால் உயிரிந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதிகாலையில் 30 பயணிகளுடன் பயணித்த பேருந்தின் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போதும் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியுள்ளார். ஓடும் பேருந்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.