குற்றாலம் அருவியில் 2வது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு...

மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் 2வது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. 

குற்றாலம் அருவியில் 2வது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு...

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதே போன்று மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் கடுமையான காட்டாற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குற்றால அருவிக்கரையின் இரு ஆற்று பாலங்களையும் கடந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த வெள்ளப் பெருக்கு அங்குள்ள கோயில்தெரு, வர்த்தக கடைகளுக்குள்ளும் புகுந்ததால் கடை உரிமையாளர்கள் ஒட்டம் பிடித்தனர். மேலும் குற்றாலம் மெயின் அருவியில் பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் பயணிகள் அருவிக்கு நடந்து செல்லும் நடைபாதை தளம் ஆகியவை 
பெரும் சேதம் அடைந்துள்ளன.